பத்திரிகையாளர்களுக்கு சலுகை மறுப்பு, வசூல் வேட்டை, சொத்துக் குவிப்பு, அதிகாரத் திமிர் - உயர் அதிகாரிகள் மௌனம் ஏன்? பின்னணியில் அரசியல் செல்வாக்கா?
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் செய்தித் தொடர்புத் துறை அலுவலராக (PRO) நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் அசோக் குமார் மீது பத்திரிகையாளர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ளன. இவர் சுமார் ஆறு வருடங்கள் முடிந்து ஏழாவது வருடமாக ஒரே இடத்தில் பணியில் நீடிப்பது, அரசு விதிகளுக்கு முரணாக உள்ளது என்ற கேள்வியுடன், இவர் பத்திரிகையாளர்களுக்கு வழங்க வேண்டிய அரசு சலுகைகளைத் தடுத்து நிறுத்துவதாகவும், வசூல் வேட்டையில் ஈடுபடுவதாகவும் பூதாகரமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசு அதிகாரிகள் கட்டாயம் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற நிலையில், அசோக் குமார் ஏழு வருடங்களாக ஒரே இடத்தில் தொடர்ந்து நீடிப்பது பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இவர் பத்திரிகையாளர்களை 'சிறு பத்திரிகையாளர்', 'பெரிய பத்திரிகையாளர்' என்று தரம் பிரிப்பதாகவும், முன்னணி நிறுவனங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து அரசு சலுகைகளைப் பெற்றுத் தருவதாகவும் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, சிறு பத்திரிகையாளர்களை உதாசீனப்படுத்துவதுடன், அவர்களுக்கு வரவேண்டிய அரசு சலுகைகள் மற்றும் நிகழ்ச்சி ஊக்கத்தொகைகளையும் பழிவாங்கும் நோக்கத்தோடு திட்டமிட்டு மறுப்பதாகவும் கூறப்படுகிறது. சிறு பத்திரிகையாளர்களுக்குச் சேர வேண்டிய ஊக்கத்தொகையைத் திரித்துக் கூறி, முன்னணி பத்திரிகையாளர்களுக்கு மட்டும் வழங்குவதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், அசோக் குமார் எப்போதும் முக மலர்ச்சியின்றி, யாரையும் மதிக்காமல், ஆணவத்துடனும், அகங்காரத்துடனும் நடந்துகொள்வதாகவும், எது கேட்டாலும் எரிந்து விழுவதாகவும் பத்திரிகையாளர்கள் குமுறுகின்றனர்.
இவரின் மற்றொரு அதிர்ச்சிகரமான செயல், மாவட்டத் துறை சார்ந்த அரசு அதிகாரிகளிடமும், உள்ளாட்சி பிரதிநிதிகளிடமும் (ஊராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள், நகரமன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள்) அசோக் குமாரும், இவரது ஓட்டுநரும், உதவியாளரும் இணைந்து வசூல் வேட்டையில் ஈடுபடுவதாகப் பரவலாகப் பேசப்படுகிறது. "டீசலுக்குப் பணம்", "செய்தி வெளியிடுவதற்கான செலவு" போன்ற காரணங்களைக் கூறி, இலட்சக்கணக்கில் பணம் வசூல் செய்து வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய வசூல் வேட்டை மூலம் அவர் பினாமி பெயரில் பல சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாகவும் அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது.
அசோக் குமார் பத்திரிக்கையாளர்களிடம் குண்டக்க, மண்டக்க கேள்வி கேட்டு மிகுந்த ஆணவத்துடனும், அதிகாரத்துடனும், முக மலர்ச்சியின்றியும் நடந்துகொள்வதாகவும், யாரையும் மதிக்காமல் பேசுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பத்திரிகையாளர்களைப் பார்த்து, "நான் இருக்கும் வரை உங்களுக்குச் சலுகை தரமாட்டேன். எனக்குப் பின்னணியில் என்னுடைய சொந்தக்காரர் அமைச்சர் துரைமுருகன் இருக்கிறார். என் ஜாதிக்காரர் (சமூகத்தைச் சார்ந்தவர்) ஜெகத்ரட்சகன் இருக்கிறார். அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள். என்னை ஒன்றும் செய்ய முடியாது" என்று சவால் விடுப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இத்தகைய வெளிப்படையான அரசியல் செல்வாக்கைக் கூறிப் பணியாற்றுவதும், அவர் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதுமான பின்னணி, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இவரைக் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ. யூ. சந்திரகலா மற்றும் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தியிடம் புகார் தெரிவிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வாயை பொத்திக் கொண்டிருக்கிறார்கள்
உயர் அதிகாரிகள் மெத்தனமும் மௌனமும்: பின்னணியில் அரசியல் செல்வாக்கா? என்ற சந்தேகம் எழுகிறது
துரைமுருகன்
R.காந்தி
இதுவரையில் அசோக்குமார்
பத்திரிகையாளர்களின் சலுகையை மறுத்து, பாரபட்சமாக நடந்து வருகிறார் குறிப்பாக, அரசியல் தொடர்புகளைக் கூறி அவர் அதிகாரத்துடனும் ஆணவத்துடனும் செயல்படும் நிலையில், தலைமை அலுவலகத்தின் இந்த மௌனம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. செய்தி துறை அமைச்சர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் ஏன் இவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர்? இவருக்குப் பின்னணியில் இருக்கும் அரசியல் செல்வாக்கு மற்றும் சாதி ரீதியிலான தொடர்புகள், இவர் ஒரே இடத்தில் நீடிக்கக் காரணமாக இருக்கிறதா? என்ற சந்தேகங்கள் பத்திரிகையாளர்கள் மத்தியில் வலுத்துள்ளன.
ஜெகத்ரட்சகன் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர்
பல்வேறு தரப்பில் இருந்தும், அசோக் குமாரின் செயல்பாடுகள் குறித்து அதிருப்திகள் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பத்திரிகையாளர்கள் நலன் காக்கப்படவும், அரசின் விதிமுறைகள் நிலைநாட்டப்படவும், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தமிழக அரசு உடனடியாக அசோக் குமார் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அவரைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும், சொத்துக் குவிப்புக் குற்றச்சாட்டுகள் குறித்துச் சுதந்திரமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறன்றனர்.