தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள ஓய்வூதியதாரருக்கான கூட்டம் 16.10.2025 இன்று மாலை ஓய்வூதியதாரர் அமைப்பின் மணிகண்டம் ஒன்றிய துணை ஒருங்கிணைப்பாளர் தோழர் K.மேகராஜ் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் கட்டட சங்க திருச்சி மாவட்ட தலைவர் தோழர் M.R.முருகன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் கூட்டத்தை வாழ்த்தி சிபிஐ மாவட்ட குழு உறுப்பினர் தோழியர் M. ரஜியாபேகம் இளைஞர் மன்ற ஒன்றிய செயலாளர் தோழியர்A. இன்னசென்ட் விமலா மேரி, சிபிஐ ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் தோழியர் B.பல்கிஸ்பானு ஆகியோர் வாழ்த்துரை வழங்கி கூட்டத்தில் தோழர்கள் மேகராஜ், ராசப்பா, லட்சுமி, இளஞ்சியம், கிருஷ்ணவேணி, ராஜம்மாள், சுப்புலெட்சுமி,சுமதி, பார்வதி, மாரிகண்ணு, செல்வராஜ் ,தவமணி, சபாபதி, ராமு ,பாப்பாத்தி, பஷிராபேகம்,இந்திராணி, பழனிச்சாமி, எஸ் இளஞ்சியம் உள்ளிட்ட பல்வேறு ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டு
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன
மாதம் மாதம் வழங்கும் ஓய்வூதியம் ரூபாய் 1200ஐ 5ம் தேதிக்குள் வழங்க வேண்டும்
மத்திய மாநில அரசுகளே கட்டுமான தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை 9 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கு
கட்டுமான தொழிலாளர்கள் வாரிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஓய்வூதியத்தை உடனே 2 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசே வழங்கு
கட்டுமான தொழிலாளர்களுக்கு பாண்டிச்சேரி மாநிலம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வழங்குவது போல் தமிழக அரசே தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ஆக ரூபாய் 5 ஆயிரம் வழங்கு
ஓய்வூதியம் பெரும் கட்டுமான தொழிலாளர்கள் அனைவருக்கும் விபத்து மரணம் இயற்கை மரணம் ஈமச்சடங்கு உதவித்தொகை தமிழக அரசே வழங்கு
தமிழக அரசே இந்த மாத ஓய்வூதியத்தை தீபாவளிக்கு முன்பாக அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடு
ஓய்வூதியம் பெறும் அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கு தமிழக அரசே பஸ் பாஸ் வழங்கு
இந்த தீர்மானங்கள் அனைத்தும் நடந்து கொண்டிருக்கும் சட்டமன்ற கூட்டத் தொடரிலே தமிழக அரசு அறிவித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
முடிவில் தோழியர் மாரிக்கன்னு நன்றி கூறினார்.