பாமக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்; குரோமியம் கழிவுகளை அகற்ற வலியுறுத்தி தீர்மானம்


ஆற்காடு, செப்டம்பர் 24:
பாட்டாளி மக்கள் கட்சியின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் ஆற்காடு கலவை சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் என். சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கே.எல்.இளவழகன் அனைவரையும் வரவேற்றார்.
இந்தக் கூட்டத்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டு, பல்வேறு முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினர்.


 ராணிப்பேட்டையில் உள்ள டிசிசிஎல் நிறுவனத்தின் குரோமியம் கழிவுகள் இதுவரை அகற்றப்படவில்லை. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்தக் கழிவுகளை உடனடியாக அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாநில அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

 ஆற்காடு பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உடனடியாகக் கொண்டு வர வேண்டும்.
 வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை வழங்காமல் ஏமாற்றிய திமுக அரசைக் கண்டித்து, டிசம்பர் 2025-ல் நடைபெற உள்ள சிறை நிரப்பும் போராட்டத்தில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டத்திலிருந்து சுமார் 10,000 பேர் பங்கேற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 

இக்கூட்டத்தில், முன்னாள் மாவட்டத் துணைத் தலைவர் புல்லட் ராதாகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தினப் புரட்சி ராஜேந்திரன், வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் பூண்டி நடராசன், மாவட்ட சங்க செயலாளர் லட்சுமணன், மாவட்ட பொருளாளர் அமுதாசிவா, மாநில மாணவர் அணி செயலாளர் ஜானகிராமன் ஆற்காடு நகர தலைவர் சஞ்சீவி, முன்னாள் மாவட்ட செயலாளர் எம் கே முரளி, முன்னாள் மாவட்ட செயலாளர் சரவணன், நகர செயலாளர் மளிகை கடை பாஸ்கர்,  முன்னாள் மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் பழனி, முன்னாள் நகரத் தலைவர் திரு முருகன்,முன்னாள் நகர செயலாளர் ஏ வி டி பாலா, நகர இளைஞரணி செயலாளர் செல்வம், வாலாஜா நகர செயலாளர் ஞானசேகர்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Previous Post Next Post