ஆற்காட்டில் ஆசிரியர் தின விழா
ராணிப்பேட்டை மாவட்டம்
ஆற்காடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராஜலட்சுமி துரை தலைமை தாங்கினார் , மற்றும் தலைமை ஆசிரியர் பரிமளா வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் smc உள்ளாட்சி பிரதிநிதி விஜயகுமார்
லயன்ஸ் கிளப் தலைவர் செந்தில்குமார் மாவட்ட பிரதிநிதி மணிவண்ணன் மற்றும் அரவிந்தன், எக்ஸிக்யூட்டிவ் இன்ஜினியர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பள்ளி மாணவிகள் ஆசிரியர்களுக்காக பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். 140 ஆசிரியர்களுக்கு சமூக அறப்பணியாளர் விருது சான்றிதழ்கள் மதுரை தமிழ் சங்கத்துடன் இணையப் பெற்ற சிந்தனைச் சிறகுகள் பன்னாட்டு சங்கமம், நாகப்பட்டினம் சங்கம் சார்பில் தலைவர் ரெத்னகுமார்,
நிறுவனர் செல்வராணி ரெத்தினகுமார் அவர்கள் வழங்கி கௌரவிக்க, ஆற்காடு அரிமா சங்கத் தலைவர் எழுதுகோல் வழங்கி சிறப்பித்தார். ஆசிரியர் பிரதிநிதி மாலினி நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியை முனைவர் பெ. தமிழ்ச்செல்வி முதுகலை ஆசிரியர் குணசேகரன் முன்னெடுத்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர்கள் காயத்திரி, உமாராணி, கனிதா ஆகியோர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. இறுதியில் நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.