அரசியல் பாணியில் ரவுடிசம் செய்யும் அருங்குன்றம் வேலு
ராணிப்பேட்டை தொகுதி
ஆற்காடு ஒன்றியம் அருங்குன்றம் ஊராட்யில் பழமை வாய்ந்த தர்மேஸ்வரர் கோவில் இருந்து வருகிறது இக்கோயில் இந்து அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது
கோயிலுக்கு சொந்தமாக 15 வீடுகள், பத்து கடைகள் ஆறு ஏக்கர் நிலம் உள்ளது இவைகள் வாடகைக்கு விடப்பட்டு பணம் வசூலிக்கப்படுகிறது
இந்த நிலையில
அருங்குன்றம் அண்ணா நகர் முதல் தெருவை சார்ந்த வேலு என்பவர் கடந்த 2010திலிருந்து 15 வரை தர்மகத்தாவாக செயல்பட்டு வந்துள்ளார்
அந்த காலகட்டத்துல தர்மேஸ்வரர் கோவிலில் தின பூஜை, மண்டல பூஜை,கும்பாபிஷேகம் எதுவுமே நடைபெற்றது கிடையாது என்கிறார்கள் அவ்வூர் பொதுமக்கள்
அதன் பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு அதே கிராமத்தைச் சேர்ந்த முரளி என்பவரின் மகன் வினோத் கோவில்களில் உழவார பணிகள் தொண்டு செய்வது போன்ற ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார் தன்னுடைய சொந்த கிராமத்தில் தர்மேஸ்வரர் கோவிலில் உழவாரப் பணியில் ஈடுபட்ட போது கோவிலை பராமரித்து கும்பாபிஷேகம் செய்து தொடர் பூஜை நடத்த வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2023 ஆம் ஆண்டு இந்து அறநிலைத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு அனுமதி கேட்டு அலைந்திருக்கிறார் எப்படியோ அதிகாரியின் கண்களில் தயவு கிடைத்து கோவில் பராமரிப்பு மற்றும் கும்பாபிஷேகத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது
கும்பாபிஷேகம் செய்வது சம்பந்தமாக ஊர்ல கூட்டம் நடந்துள்ளது கூட்டத்துக்கு வந்திருந்த பெரியோர்கள் கும்பாபிஷேகம் பண்ணு ஆனா எங்களிடம் பணம் கேட்கக் கூடாது என்ற நிபந்தனை வைத்துள்ளனர் அதையும் ஏற்றுக்கொண்டு கோவில் பராமரிப்பு பண்ணிக்கான முயற்சியில் ஈடுபடும் போது அதே ஊரை பூர்வீகமாகக் கொண்ட மாதங்கி என்பவர்
அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார் தன்னுடைய பூர்விக கிராமமான அருங்குன்றத்திலுள்ள தனது குலதெய்வ கோவிலான தர்மேஸ்வரர் ஆலயத்தின் மீது பற்று கொண்டவர் எப்படியாகிலும் நம்ம ஊரு கோவில் புதுப்பிக்கப்பட்டு பூஜை நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்தவர் வினோத் என்பவர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் ஏற்பாடு செய்ய முன் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டு அவரை தொடர்பு கொண்டு கோவில் பராமரிப்பு செய்வதற்கு நானும் சந்தர்ப்பம் எதிர்பார்த்திருந்தேன்
நீங்கள் முன்வந்திருப்பது சந்தோசம் கோவில் பராமரிப்பு செலவிற்கு என்னால் முடிந்தத பணத்தை அனுப்புகிறேன் அதற்கான பணிகளை மேற்கொள்ளுங்கள் என்று உற்சாகப்படுத்தியுள்ளார் கோவிலில் சிதலடைந்திருந்த சுவர்கள், தரை எல்லாவற்றையும் அகற்றி அதனை புதுப்பித்து புதிதாக சுற்றுச்சுவர் அமைத்து ஒயரிங் பெயிண்டிங் கோபுரம் பராமரிப்பு அனைத்து வேலையும் ஒழுங்கும் கிராமமாக செய்துள்ளார் தனக்குத் தெரிந்த நண்பர்களிடம் நன்கொடை பெற்று கும்பாபிஷேகம் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்து கோலாகலமான விழாவாக கொண்டாடப்பட்டிருக்கிறது
மாதங்கியின் பேருதவியால் கோவிலில் தினமும் பூஜை செய்வதற்கு கத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரையும் நியமனம் செய்துள்ளனர்
கும்பாபிஷேகத்திற்கு பிறகு வினோத்திற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது முன்னாள் தர்மகத்தா வேலுவுக்கும் அவரின் கூட்டாளியான சின்னப் பையன் என்கிற சிவலிங்கத்திற்கும் இதனைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை தர்மகத்தாவாகயிருந்து நம்மால் செய்ய முடியாதை ஒரு சின்னப் பையன் செய்து விட்டானே இதனை இப்படியே விடக்கூடாது அவன் வளர்ந்து விடுவான் என்ற பொறாமை எண்ணம் கொண்டு வினோத்தை கோவில் பணிகளில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்தி கோவில் பணியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பல சூழ்ச்சிகள் செய்து வந்துள்ளனர் கோவில் பணியிலிருந்து வினோத் வெளியேற்றுவதற்கு இந்து அறநிலைத்துறை அதிகாரிகளோடும் வேலு ஆலோசனை செய்து அவர்களின் ஆதரவையும் பெற்றுள்ளார்
வினோத்
இப்படி இருக்க கடந்த ஜூன் 3ஆம் தேதி வினோத் கோவிலை சுத்தம் செய்வதற்காக கோவில் பூசாரி பிரபாகரனிடம் சாவியை வாங்கிக்கொண்டு
கோவிலை சுத்தம் செய்துள்ளார் இதனை கேள்விப்பட்ட முன்னாள் தர்மகத்தா வேலு சின்ன பையன் என்கிற சிவலிங்கமும் பூசாரி பிரபாகரனிடம் யாரிடம் சாவி கொடுத்த? யாரைக்? கேட்டு கொடுத்தாய் கண்டவனிடம் சாவி கொடுக்கலாமா? என்றெல்லாம் அவரை மிரட்டி உள்ளனர்
சம்பவம் அறிந்த வினோத் அறநிலை துறை அதிகாரி சுரேஷ்குமாரை தொடர்பு கொண்டு பேச முயற்சித்த போது அவர் போனை எடுக்கவில்லை அதனைத் தொடர்ந்து வேலுவிடமே ஐயா நான் சாவி வாங்கிய போது என்னிடம் சாவி கொடுக்கக் கூடாது என்றெல்லாம் சொல்லியிருக்கிறீர்கள் ஏன் என்று கேட்டதற்கு நீ யாருடா ஊரைவிட்டு ஊற வந்தவனுக்கு கோவில் சாவியை வாங்கி திறப்பதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது நீ எல்லாம் சாவி வாங்க கூடாது கோவிலுக்குள் போகவும் கூடாது,
என்று தகாத வார்த்தைகளை ரவுடி பாணியில் பேசியுள்ளார் சின்னப் பையனும் அதே பாணியில் வினோத்தை மிரட்டியுள்ளனர் அதே ஊரைச் சேர்ந்த கருணாகரனும் பொதுமக்களை தூண்டி விட்டுள்ளார்
பூசாரி பிரபாகரனையும் மிரட்டி இனிமேல் கோயிலுக்குள் வந்து பூஜை செய்யக்கூடாது என்று தடை செய்துள்ளனர்
இந்து அறநிலைத்துறை அதிகாரிகளின் உதவியோடு எந்த ஒரு முன்னறிவிப்பில்லாமல் பூசாரியை வேலை விட்டு தூக்கி உள்ளனர்
இந்த சம்பவம் தொடர்பாக வினோத் கடந்த ஏழாம் தேதி நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் வேலு சின்னப் பையன் மீது புகார் மனு கொடுத்துள்ளார்
தற்போது அது ரத்தினகிரி காவல் நிலையத்தில் விசாரணையில் இருந்து வருகிறத
இந்து அறநிலைத்துறை ஆய்வாளர் சுரேஷ்குமார்
இந்து அறநிலைத்துறை ஆய்வாளர்
சுரேஷ்குமாரிடம் நேரில் சென்று விசாரித்தோம் அவர் வேலுவும் வினோத்தும் நல்ல நண்பர்கள் இவர்களுக்கு இடையே தனிப்பட்ட விரோதம் காரணமாக கோவில் பிரச்சனையை முன் வைக்கிறார்கள் கோவில் சம்பந்தப்பட்ட புகார்களை இருவரும் எங்களிடம் சொன்னதே கிடையாது தற்போது கோவில் பூசாரியாக பணி செய்து வரும் பிரபாகரனுக்கு இந்து அறநிலை துறை சார்பாக இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கி வருகிறோம் வேலு வினோத் என்பவர்களுக்கு இடையே ஏற்படும் மன குழப்பத்திற்கு நாங்கள் காரணம் இல்லை எங்களுக்கு எதுவும் தெரியாது என்று பலிட்டி அடித்துப் பேசினார்
கோவில் பூசாரி பிரபாகரன்
வேலுவிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது அவர் நான் திமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லை காந்தியின் கல் குவாரியில் வேலை செய்வதாக உங்களிடம் யார் சொன்னது நான் ரவுடி பாணியில் நடந்து கொள்ளவில்லை அது எங்களுடைய ஊர் பிரச்சனை அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் நீங்கள் என்னிடம் பேசுவதாக இருந்தால் நேரில் வாருங்கள் என்று அலைபேசியை துண்டித்துக் கொண்டார்
வினோதிடம் தொடர்பு கொண்டு பேசினோம் அவர் வேலுவும், சின்ன பையனும் தற்போது என்னை கோவிலுக்குள் செல்லக்கூடாது கோவில் சாவியை வாங்கக்கூடாது பராமரிப்பு பணி செய்யக்கூடாது என்கிறார்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு சிதலடைந்து கிடந்த கோவிலை பலரின் உதவியோடு சீரமைப்புச் செய்து கும்பாபிஷேகம் செய்தேன் அதனைத் தொடர்ந்து பூசாரியை நியமித்து தொடர் பூஜை நடத்தி வருகிறேன் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது இன்று கோவிலுக்குள் வரவேண்டாம் என்று சொல்லுகிறவர்கள் அப்பொழுதே சொல்லியிருந்தார்களானால் நான் கோவில் குள் சென்றிருக்கமாட்டேன் எல்லா வேலையும் முடிந்த பிறகு இப்பொழுது வரக்கூடாது என்று சொல்வதற்கு காரணம் என் மீது கொண்ட பொறாமையும் என் வளர்ச்சியும் அவர்களுக்கு பிடிக்கவில்லை
எம்எல்ஏ காந்தியின் கல்குவாரியில் எடுபுடி வேலை செய்து கொண்டு நான் திமுக காரன் என்ற போர்வையில் அடாவடி, அராஜகம் ரவுடி பாணியில் மிரட்டி வருகிறார் இது சம்பந்தமா புகார் கொடுத்துள்ளேன் விசாரணை நடைபெற்று வருகிறது அவர் திமுக காரர் என்றால் நாங்கள் யார் நாங்களும் திமுக தான்
எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார் காலம் பதில் சொல்லும் என்றார்..
வேலுவும் அவர்களின் நண்பர்களும் இந்து அறநிலைத்துறை அதிகாரிகளும் ஒன்றிணைந்து நாடகமாடுகிறார்கள் என்பது இவர்களின் பேச்சில் இருந்தே புலனாகிறது துறை சார்ந்த அதிகாரிகள் நிதானித்து இதில் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பாய் இருக்கிறது
மாவட்ட செய்தியாளர்
M.சாமுவேல் ராணிப்பேட்டை