கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிபட்டினம் மண்டலம் பேருஅள்ளி கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிக்கு தக்கப்பாடம் புகுட்டும் வகையில் சிறப்பாக செயப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
..............................
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிபட்டினம் மண்டலம் பேருஅள்ளி கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது,
மண்டல தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் தருமன், மண்டல செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட பொது செயலாளர் அகிலன்,
மாவட்ட பொருளாளர் மணி, மாவட்ட செயலாளர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
மேலும் இந்த
கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜி, மாவட்ட துணைத் தலைவர் சாந்தமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து சிறப்பு உரையாற்றினார்கள்.
மேலும் அந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியில் அதிக அளவில் உறுப்பினர்
சேர்க்கையை அதிகரிக்கப்பட வேண்டும் ,
வருகின்ற என சட்டமன்ற தேர்தலில் காவேரிப்பட்டணம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிறப்பாக பூத் கமிட்டி அமைத்து அதற்கான பணியை விரைவாக தூங்குவது மற்றும் மத்திய அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்து அதிகப்படியான உறுப்பினர்களை சேர்ப்பது என்றும், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவின் கூட்டணி கட்சி சார்பில் யாரை வேட்டாளராக அறிவித்தாலும் அவர்களை
அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து திமுகவுக்கு பாரதிய த
கட்சியின் பலத்தினை நிறுபிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இந்தக் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்ந்த கோபாலகிருஷ்ணன், சபரி, ராஜன் கிருஷ்ணமூர்த்தி, மாதவன்,கோவிந்தராஜ், சரவணன்,முருகன் மற்றும் மகளிர் அணி சேர்ந்த சித்ராவும்,அருணா,
வினோதினி,ஜெயந்தி,
ஜான்சி ராணி, சாலா உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்