திண்டிவனம், ஜூலை 13: பள்ளிக் கல்வித் துறை மூலம் வழங்கப் பட்ட அண்ணா தலைமைத்துவ விருதை விழுப்புரம் மாவட்டத் தில் பெற்ற 3 தலைமையாசிரியர்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் பாராட்டினார்.
பள்ளிக் கட்டமைப்பு, கல்விச் செயல்பாடுகள், இணை செயல் பாடுகளை ஆய்வு செய்து, அத னடிப்படையில் 100 சிறந்த தலை மையாசிரியர்கள் தேர்வு செய்யப் படுவர். அவர்களுக்கு அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப் படும் என்றும், இந்த விருதுடன் பள்ளியின் வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப் படும் என்றும் பள்ளிக்கல்வித் துறையின் மானியக் கோரிக்கை யின் போது அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித் திருந்தார்.
அதனடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 100 தலைமையா சிரியர்களுக்கு அண்ணா தலைமைத்துவ விருது மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்படும்
பரிசுத்தொகையை திருச்சியில் ஜூலை 6-ஆம் தேதி நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யா மொழி ஆகியோர் வழங்கினர்.
இந்த விருதை விழுப்புரம் மாவட்டம் தேர்வில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்லையா ரெட்டணை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சு. கலையரசன் சென்னா குணம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருணகிரி ஆகியோர் பெற்றனர் இதைத் தொடர்ந்து விருது பெற்ற சு. கலையரசன், செல்லையா அருணகிரி ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான்,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் பாராட்டி, வாழ்த்துக்களில் தெரிவித்தார்கள் மேலும் சிறந்து விளங்கவும் பள்ளியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து சிறப்பான பணிகளை மேற்கொள்ளவும் ஆலோசனைகளை முதன்மை கல்வி அலுவலர்கள் வழங்கினார் இதுபோல தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் விருது பெற்றவர்களையும் வாழ்த்தினார்