மத்தூர் மசூதி தெருவில் முறையாக குடிநீர் வழங்குவது இல்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் மசூதி தெருவில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்களுக்கு கடந்த ஐந்து மாதமாக குடிநீர் வழங்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இங்கிருக்கும் மக்களுக்கு 15 ஆவது நிதி குழு மாநிலத்தின் கீழ் 2023-24 கட்டப்பட்டது. இந்த மேல்நீர் தேக்க தொட்டி சுமார் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்டது. இந்த டேங்க் கட்டி முடிக்கப்பட்டு இங்கு இருக்கும் மக்களுக்கு முறையாக வீதி வீதிக்கு பைப்பு அமைக்காமல் டேங்க் அடியிலேயே ஒரே இடத்தில் மூன்று குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
பகுதியில் உள்ள மக்கள் தண்ணீருக்காக நீண்ட கியூ வரிசையில் நின்று தண்ணீர் பிடிப்பதால் ஒருவருக்கு ஒருவர் சண்டை சச்சரவுகள். வாக்குவாதம் ஏற்படுகிறது.எனவே வீட்டு வீட்டிற்கு ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் குழாய் அமைத்துத் தருமாறு வட்டார வளர்ச்சி அலுவலர்களிடமும், ஊராட்சி மன்ற செயலாளரிடமும் பலமுறை புகார் அளித்தும் எங்களுக்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோல் ஊராட்சி செயலாளர் அவர்களிடமும் தகவல் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்களுக்கு முறையான குடிநீர் பைப் வீட்டு வீட்டிற்கு வழங்க வேண்டும் எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக பார்வையிட்டு குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.