திருத்துறைப்பூண்டி அருகே உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றவர் வீட்டில் வெள்ளி பொருடகள் திருட்டு
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேப்பஞ்சேரியில் வசிப்பவர் அசோக் குமார் தனது உறவினர் சுப நிகழ்ச்சிக்கு தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார் பகல் ஒரு மணி அளவில் வீட்டில் யாரும் இல்லை என்று தெரிந்து கொண்ட திருடர்கள் முன் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று மூன்று பீரோக்களை உடைத்து அதில் இருந்த முப்பது ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி குங்குமச்சிமிழ் திருடியுள்ளனர் அசோக் குமார் வீட்டில் நாய் கத்திக் கொண்டிருந்துள்ளது பக்கத்து வீட்டில் வசிக்கும் விஜயலட்சுமி அந்த நாய்க்கு சாப்பாடு வைக்க போனபோது வீட்டில் ஆள் நடமாட்டம் தெரிந்துள்ளது . உடனடியாக விஜயலட்சுமி அக்கம் பத்தினரை உதவிக்கு அழைத்து சத்தமிட சத்தம் கேட்டு திருடர்கள் பின்பக்கமாக தப்பித்து சென்றுவிட்டனர்அருகில் உள்ளவர்களை சத்தமிட்டன் திருடர்கள் தப்பித்து விட்டனர் தகவல் அறிந்து வந்த எடையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்அசோக் குமார் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு செல்லும்போது நகைகளை எடுத்து சென்றதால் 25 பவுன் நகை அதிர்ஷ்டவசமா தப்பித்தது