தமிழ்நாடு அரசு தேர்தல் நடத்தை விதிமுறையை காரணம் காட்டி பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தாமல் விவசாயிகளை காலம் கடத்துவது ஏமாற்றம் அளிக்கிறது என மன்னாா்குடியில் பி.ஆர்.பாண்டியன் ஆவேசம்

தருண்சுரேஷ் செல்  :    9791655612         மன்னார்குடி        27 .05.2024 
தமிழ்நாடு அரசு தேர்தல் நடத்தை விதிமுறையை காரணம் காட்டி பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தாமல் விவசாயிகளை காலம் கடத்துவது ஏமாற்றம் அளிக்கிறது என மன்னாா்குடியில் பி.ஆர்.பாண்டியன் ஆவேசம்  

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கினைப்பு குழுத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களுக்கு பெட்டியளித்தார் அப்போது தமிழ்நாடு முழுவதும் கோடை மழை பேரழிவு பெரு மழை பெய்திருக்கிறது கோடை சாகுபடி செய்யப்பட்ட விளைநிலங்கள் மிகப்பெரிய அளவில் சாய்ந்து மகசூல் இழப்பை சந்திக்கிற நிலை ஏற்பட்டுள்ளது பருத்தி பயிரிடப்பட்ட விவசாயிகள் முழுமையாக அழிந்து போய்விட்டார்கள் தமிழ்நாடு அரசின் வேண்டுகோளை ஏற்று தான் மாற்று பயிர் சாகுபடி என்கிற முறையில் பருத்தி சாகுபடியே மேற்கொண்டனர் இன்றைக்கு ஒட்டுமொத்தமாக பருத்தி அழிந்திருக்கிறது எள், கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துப்பயிர்களும் பெரும் சேதத்தை சந்தித்திருக்கிறது வாழை உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களும் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்திருக்கிறது இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தேர்தல் நடத்தை விதிமுறையை காரணம் காட்டி பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தாமல் விவசாயிகளை காலம் கடத்துவது ஏமாற்றம் அளிக்கிறது உடனடியாக சிறப்பு அனுமதி பெற்று பாதிக்கப்பட்டு இருக்கிற பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி பேரிடர் மேலாண்மை திட்டத்திலிருந்து நெல் ஏக்கர் ஒன்றுக்கு ரூ 35 ஆயிரமும் வாழை உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்கள் பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ 50 ஆயிரம் இழப்பீடாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம் கர்நாடகாவில் மழை பெய்து அணைகளில் நிரம்பிக் கொண்டிருக்கிறது மாதாந்திர அடிப்படையில் நமக்கு தர வேண்டிய நிலுவை தண்ணீரை உடனடியாக பெற வேண்டும் குருவை சாகுபடி மேற்கொள்வதற்கு சாதகமான தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கியிருக்கிறது அதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் கோடை உழவு செய்வதற்கு டிராக்டர் உழவு மானிய வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் விவசாயிகளுக்கு இலவசமாக கடந்த ஆட்சி காலத்தில் வறட்சி பாதித்த போது டிராக்டர் மூலம் கோடை உளவு செய்து கொடுத்திருக்கிறார்கள் அதனை தற்போது தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் நீர் ஆதார உரிமைகள் பறிபோய்கொண்டிருக்கிறது காவிரியை தொடர்ந்து முல்லை பெரியாரில் புதிய அணை கட்டுவதற்காக கேரளா அரசாங்கம் கடந்த ஜனவரி மாதமே அதற்கான வரைவு திட்ட அறிக்கை குறித்தான விண்ணப்பத்தை மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறைக்கு கொடுத்து அதனை மே 4ஆம் தேதி சிறப்பு ஆய்வுக்குழு அமைத்து அந்த அணை கட்டுவதற்கான ஆய்வை நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளது நாளை மதியம் 12.30 மணிக்கு அதற்க்கான ஆய்வுக்கூட்டம் டெல்லியில் நடைபெறுகிற அதே நேரத்தில் இதனை உடனடியாக நிராகரிக்க வேண்டும் ஏற்கனவே உச்ச நீதிமன்ற அணை வழுவாக இருக்கிறது அணையில் 152 அடி தண்ணீரை உயர்த்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி பல உத்தரவுகளை உச்சநீதிமன்ற போட்டிருக்கிறது இந்த நிலையில் அணை வழுயில்லாமல் முல்லை பெரியாறு ஆபத்தை சந்திக்கப் போகிறது என்கிற பெயரில் இன்றைக்கு புதிய அணை கட்ட கேரளா அரசு கொடுத்திருக்கிற விண்ணப்பத்தை சட்ட விரோதமென அறிவித்து மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்பது வலியுறுத்தி நாளை மதியம் அதே நேரத்தில் 11 மணிக்கு மதுரை வருமானவரித்துறை அலுவலகத்தை தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டு தீவீர போராட்டத்தில் களமிறங்க இருக்கிறோம் அனைத்து பகுதி விவசாயிகளும் பங்கேற்க இருக்கிறார்கள் தமிழ்நாடு அரசு உடனடியாக கேரளா அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் தமிழ்நாடு அரசு மறைமுகமாக தமிழகத்திற்கு எதிரான நீர் ஆதார திட்டங்களுக்கு துணை போகிற வகையில் மூடி மறைக்க முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம் நாளை போராட்டம் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை உருவாக்கும் என்கிற நிலையோடு விவசாயிகள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்
Previous Post Next Post