ராணிப்பேட்டை மாவட்டம் குளத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக பொதுமக்கள் அளித்த புகாருக்குஅதிகாரிகள் இல்லை என்று மறுப்பு சான்றளிப்பு

குளத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக பொதுமக்கள் அளித்த  புகாருக்கு
அதிகாரிகள் இல்லை என்று மறுப்பு சான்றளிப்பு 

ராணிப்பேட்டை:-30

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் வேதராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி என்பவரின் மகன் அருள் தேவன் இவருக்கு ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் காவனூர்  ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் புலன் எண் 586-2C
93 சென்ட் சொந்த  இடம் உள்ளது

 இந்த நிலத்திற்கு அருகே ராணிப்பேட்டை மாவட்டம் ஆணைமல்லூர் ஊராட்சிக்குட்பட்ட இடத்தில்  வண்ணாங்குட்டை என்றும், சூரமாகுட்டை என்றும் அழைக்கப்படுகிற குளம் உள்ளது  இந்த இரண்டு ஊராட்சியுமே ராணிப்பேட்டை மாவட்டத்தின்  எல்லை முடிவு என்பது குறிப்பிடத்தக்கது 

 இந்த நிலையில் 
அருள்தேவன் தன்னுடைய நிலத்தை  ஜேசிபி எந்திரம் மூலம்  சமன் செய்து கொண்டிருந்தார் அப்பொழுது  ராணிப்பேட்டை மாவட்டம் வரகூர் பட்டணம் அருந்ததியர் குடியிருப்பை சேர்ந்த  பொதுமக்கள்   அருள் தேவன்  சூரமா குட்டையை  ஆக்கிரமித்து  மண் கற்களை கொட்டி நிரப்பி சமன் செய்து கொண்டிருக்கிறார்

  காலம் காலமாக பயன்படுத்தி வரும்
 வழியை அடைத்து விட்டார் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் அந்த மனுவின் மீது நடவடிக்கை மேற்கொண்ட துறை சார்ந்த அதிகாரிகள்  கள ஆய்வு செய்து  சூரமாகுட்டையை அளவிடு செய்தனர்

  நில அளவீடு முடிவில்   அருள் தேவன் குட்டையை ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்று அதற்குரிய சான்று அளித்து சென்றனர்  இந்த சம்பவத்தால் அப்பகுதியில் மூன்று நாட்களுக்கு மேலாக பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

அருள் தேவன் 
Previous Post Next Post