சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தடம் பதித்த நிலையில் அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் வெற்றியடைய வேண்டி மன்னார்குடி செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரி மாணவிகள் சிறப்பு பிராத்தனை .

சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தடம் பதித்த நிலையில் அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் வெற்றியடைய வேண்டி மன்னார்குடி செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரி மாணவிகள் சிறப்பு பிராத்தனை .
 உலகம் முழுவதும ஆவளுடன் எதிர்நோக்கியுள்ள இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தென் துருவ பகுதியில் தரையிரங்கியது. இதனை திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த சுந்தரக்கோட்டை பகுதியில் இயங்கிவரும் செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரி மாணவிகள் ஒருங்கிணைந்து கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் உலக அளவில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி உச்சம் அடைந்துள்ளதாகவும், சந்திரயான்-3 விண்கலம் விக்ரம் லேண்டர் இனி 14 நாட்கள் நிலவில் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள உள்ள நிலையில் அதன் அடுத்த கட்ட நகர்வுகள் வெற்றியடைய வேண்டியும், மேலும் நிலவில் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ள இந்திய விஞ்ஞானிகளின் சாதனை தொடர்ந்து பல வெற்றிகளை பெறவேண்டியும் சிறப்பு பிராத்தனை மேற்கொண்டனர். இதில் திரளான கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர்.

Previous Post Next Post