மன்னார்குடி அருகே கோடை சாகுபடி பணிகளுக்கு முறையாக மின்சாரம் வழங்காததால் விவசாயிகள் துணை மின் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்...
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்துள்ள சித்தேரி , 54 நெம்மேலி , தலையாமங்கலம் ,தென்பாதி உள்ளிட்ட கிராமத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை நம்பி விவசாயிகளும், விவசாய கூலி தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். இக்கிராமத்தில் ஆண்டுதோறும் பம்பு செட் மூலம் கோடை பருவ சாகுபடி பணியை விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் செய்து வருவது வழக்கம். குறிப்பாக கோடை சாகுபடிபணிக்களுக்கு மின்சார தேவை என்பது அவசியமான ஒன்று. ஆனால் அதிகாரிகள் இக்கிராமங்களில் விவசாயத்திற்கு முழுமையாக மின்சாரம் வழங்காமல் பல இடங்களில் உள்ள அரிசி ஆலைகளுக்கு மின்சாரத்தை அதிகாரிகள் வழங்கி வருவதால் இப்பகுதி விவசாயிகள் கோடை சாகுபடி பணியை சரிவர செய்ய முடியாமலும் அவதியுற்று வருகின்றனர். இதனால் நேரடி விதைப்பு செய்துள்ள பயிர்கள் மின்சார தட்டுபாட்டால் தண்ணீர் இல்லாமல் கருக தொடங்கியுள்ளது. இது சம்பந்தமாக தமிழக மின் வாரிய உயர் அதிகாரிகள் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தபோதிலும் கோடைக்காலங்களில் மின்சாரம் சரிவர கிடைக்காமல் விவசாயிகள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனை கண்டித்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சித்தேரி கிராமத்தில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழக துணை மின் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன முழக்கங்கள் எழுப்பிய கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் விவசாயித்திற்கு தங்கு தடையில்லாமல் இனி முழுமையாக மின்சாரம் வழங்கபடும் என தெரிவித்தனர் அதன்பிறகு விவசாயிகள் தாங்கள் போராட்டத்தை விளக்கி கொண்டனர்.
பேட்டி :
1, மாசிலாமணி விவசாயி
2, அருள்ராஜன் விவசாயி