தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.!!

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.!!

மார்ச்:4
ஆவணம்:1
தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா



     தமிழகத்தில் மாற்றுத்திறனாளி களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவுப்படியும், தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜிவனா இ.ஆ.ப., அவர்களின் ஆலோசணைப்படியும்உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர்  பால்பாண்டியன் அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
      மாற்றுத்திறனாளி களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பது, அரசு விதிகளின்படி அவர்களுக்கு கிடைக்கக்கூடிய உதவிகளை பெற்றுத் தருவது அதற்கான தகுதிகள் என்ன போன்ற ஆலோசணைகள் வழங்கப்பட்டன. மேலும் இந்தக் கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வரப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, தனி வட்டாட்சியர்  இளங்கோ அவர்களுக்கு தமிழ்நாட்டு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை நலவாரிய உறுப்பினர் கருப்பையா அவர்கள் நன்றி தெரிவித்தார்.
 ஜெயம் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கச் செயலாளர்  பூபதி அவர்களும், தேனீக்கள் அறக்கட்டளை சார்பாக  அழகேசன் அவர்களும்,  பாண்டி அவர்களும், பார்வையற்றோர் நலச்சங்கச் செயலாளர்  பாலகிருஷ்ணன் அவர்களும்,
காது கேளாதோர் சமூக நலச் சங்கச் செயலாளர் K.S. சையது அபுதாகீர் அவர்களும்
சிறப்பு பயிற்றுனர், சைகை மொழி பெயர்ப்பாளர்  ஆனந்தன் அவர்களும் ஏராளமான மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post