சர்வதேச மகளிர் தினம்: மகளிர் காவலர்கள் கெளரவிப்பு
சர்வதேச மகளிர் தினத்தை தொடர்ந்து பாரூர் காவல்நிலையத்தில்பணியாற்றும் பெண் காவலர்கள் - சமூக ஆர்வலர்கள் புதன்கிழமை பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
ஆண்டுதோறும் மார்ச்.8-ல் மகளிர் மகத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் சர்வதேச மகளிர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, ராசிபுரம் காவல் நிலையத்தில் மகளிர் காவலர்கள் கெளரவித்து பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பாரூர் காவல் ஆய்வாளர் ராஜேஷ் தலைமை வகித்தார். உதவி காவல் ஆய்வாளர் மகேந்திரன் செல்வ ராகவன் முன்னிலை வகித்தார். இதில் பங்கேற்று, காவல்துறையில் மகளிர் ஆற்றிவரும் சிறப்பான பணி குறித்துப் பேசினார். இதனை தொடர்ந்து, பெண் உதவி காவல் ஆய்வாளர் உள்ளிட்ட பெண் காவலர்கள் சால்வை அணிவித்து கெளரவிக்கப்பட்டனர்.