சின்ன ஓவுலாபுரம் பெண்கள் சுகாதார வளாகம் ஒரு லட்சம் வீணாக போனதோ?
04.01.2023
ஆவணம்: 1
தேனி மாவட்ட செய்தியாளர்; இரா.இராஜா
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்ன ஓவுலாபுரம் பெண்கள் சுகாதார வளாகம் கடந்த 2017_ 2018 ல் சுமார் ஒரு லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பெண்கள் சுகாதார வளாகம் தற்போது செயல் பாட்டில் இல்லை என்பதுதான் வேதனையான விஷயம் சாலை ஓரங்களில் குழந்தைகள் மலம் கழிக்கும் சுழ்நிலை நிலவுகிறது இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது உடனடியாக சின்ன ஓவுலாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ஊரில் வசிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் பெண்கள் பொதுமக்கள் நலன் கருதி பெண்கள் சுகாதார வளாக கட்டிடங்கள் புனரமைப்பு செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பெண்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.