பொதுநல வழக்கு தாக்கல் செய்த சிபிஐ(மார்க்சிஸ்ட்) வழக்கறிஞர்

பொதுநல வழக்கு தாக்கல் செய்த சிபிஐ(மார்க்சிஸ்ட்) வழக்கறிஞர்


 மதுரை மாட்டுத்தாவணி அருகில் உள்ள புதுக்குளம் கண்மாயில் குப்பைகளை கொட்டி நிரப்புவது தொடர்வதை தடுக்க கோரி மாநகராட்சி உள்ளிட்ட அரசு நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. மேலும் குப்பைகளை அதிகளவில் கொட்டி தீயிட்டு எரிக்கப்பட்டு எழும் புகையால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சுகாதார கேடு உள்ளிட்ட காற்று மாசு கேடு ஆகியவைகளாலும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேற்படி புதுக்குளம் கண்மாயை பாதுகாக்க குப்பைகளை கொட்டப்படுவதை தடுக்கவும், பொது மக்களை சுகாதார சீர்கேட்டில் இருந்து காக்கவும், ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் வசிக்கும் சிபிஐ(எம்) மேற்கு பகுதி குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான வெங்கடேஸ்வரன் என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில்  மாண்புமிகு மதுரை உயர்நீதிமன்ற பலகையின் நீதி அரசர்கள் மகாதேவன் மற்றும் சத்திய நாராயண பிரசாத் ஆகியோர்கள் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் மாநகராட்சி உள்ளிட்ட அரசு நிர்வாகங்களை ஆஜராக  உத்தரவிட்டுள்ளார்கள். இந்த உத்தரவினை பிறப்பிக்க காரணமாக இருந்த சிபிஐ(எம்) சமூக ஆர்வலரும்,  வழக்கறிஞருமான வெங்கடேஸ்வரன் என்பவருக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
Previous Post Next Post