பாஜக சார்பில் சிதம்பரத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
சிதம்பரம்
15.07.2022 வெள்ளிக்கிழமை காலை,
முன்னாள் தமிழக முதலமைச்சர் கர்ம வீரர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சிதம்பரம் கீழ ரத வீதியில் உள்ள அவரது சிலைக்கு பாஜக கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் மரியாதைக்குரிய திருமிகு K.R.மாமல்லன் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சிதம்பரம் நகர தலைவர் திரு Er.R.ஜெயக்குமார், மாவட்ட பொது செயலாளர் திரு கோபிநாத் கணேசன், அலுவலக செயலாளர் திரு அரவிந்தன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் திரு சத்தியமூர்த்தி,
அமைப்பு சாரா பிரிவு மாவட்ட தலைவர் திரு ஆளவந்தார், மண்டல் தலைவர்கள் திரு பரத், திரு பகிரதன், சிதம்பரம் நகர பொது செயலாளர் திரு G.குருமூர்த்தி மற்றும் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.