தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளரின் தாயார் பவானி வேணுவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி
காஞ்சிபுரம் மாவட்டம்
காஞ்சிபுரம் அடுத்த ஆர்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெபராஜ் மகாலிங்கம் இவர் தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்கம் என்ற கட்சியில் மாநில பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார் இவரின் தாயார் பவானிவேணு,இவர் இறந்து ஒருவருடம் நிறைவடைந்த நிலையில்
முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்கத்தின் தலைவர் டாக்டர்.ஜோயல் சுந்தர்சிங் கலந்துகொண்டு பவானி வேனுவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து நினைவு அஞ்சலி செலுத்தி, ஜெபராஜ் மகாலிங்கம் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்
தொடர்ந்து பேசிய அவர் மனிதன் என்ற சொல்லும் மரணம் என்ற சொல்லும் சமத்துவச் சொற்களாகும் உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் சாதியால், மதத்தால், இனத்தால், மொழியால், நாட்டால் வேறுபட்டிருந்தாலும் மனிதன் என்ற சொல்லும் மரணம் என்ற சொல்லும் சமத்துவத்தை நிலை நாட்டுகிறது ஆகவே மனிதர்களாகிய நாம் பல்வேறு நிலைகளில் வேறுபட்டிருந்தாலும்
மனிதன்- மரணம் தவிர்க்க முடியாது உயிர் உள்ளவரை மனிதாபிமானத்துடன் மனிதநேயத்தோடும் நடந்து கொள்ள வேண்டும் என்றார் அதைத்தொடர்ந்து நீரே போதும் என்ற ஆடியோ ஒளி பேழையை ஜெபராஜ் மகாலிங்கத்தின் பெரியம்மா ஜீவா வெளியிட்டார் இந்த நிகழ்ச்சியில் பேராயர்கள் ஜான்பால்,மணிவேல்
ஜோசப் மனோவா கட்சியின் தேசி இணைச்செயலாளர்
ஞானகரன், காட்ஸ் ஐடிவி நிறுவனர் ரகு இமானுவேல், மாநிலச் செயலாளர் ஜான் ஜேக்கப், சென்னை மண்டல பொருளாளர் சரவணன், மாநில அமைப்பாளர் யோபு ஞானப்பிரகாசம், போதகர்கள் மற்றும்
உறவினர்கள் ஊர்பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் நிகழ்ச்சி இறுத்ததில் ஜெபராஜ் மகாலிங்கம் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.