கிள்ளையில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க நீரேற்றும் நிலையங்களில் அதிகாரி ஆய்வு

கிள்ளையில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க நீரேற்றும் நிலையங்களில் அதிகாரி ஆய்வு

 கிள்ளை பேரூராட்சி மக்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாககொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிள்ளை பேரூ ராட்சி சார்பில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கும்படி குடிநீர் வடிகால் வாரியத்திற்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட குடிநீர் வழங்கல் மேற்பார்வை பொறியாளர் சந்திரமோகன் கிள்ளை பேரூ ராட்சி பகுதியில் உள்ள நீரேற்றும் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பொதுமக்களுக்கு தட்டுபாடின்றி குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அப் போது பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகை முத்துகுமார், துணை தலைவர் கிள்ளை ரவீந்திரன், கவுன்சிலர் பாண்டியன், செயல் அலுவ லர் செல்வி, பேரூராட்சி எழுத்தர் செல்வம் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Previous Post Next Post