துணை வட்டாட்சியர் உட்பட 3 பேர் கைது
........................................................
தேனி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிலம் தனியாருக்கு சட்டவிரோதமாக பட்டா மாற்றம் செய்யப்பட்ட வழக்கில் துணை வட்டாட்சியர் மோகன்ராம் நில அளவையர் சக்திவேல் மற்றும் சக்திவேலுக்கு உதவியாக இருந்த செல்வராஜ் ஆகிய 3 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர் இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் தேனி அருகே உள்ள தேக்கம்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர் இந்த வழக்கில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது