"செய்தி வெளியிட அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் வேண்டுகோள்"
*************************
12ஆயிரம்
பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும்: முதல்வர் ஸ்டாலின் :
--------------------------------------
திமுக தேர்தல் வாக்குறுதி 181ன்படி தமிழக முதல்வர், பகுதிநேர ஆசிரியர்களை முதல்வர் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது.
இது குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறியது :
பணிநிரந்தரம் கனவோடு பணியில் சேர்ந்த 16ஆயிரம் பேரில் மரணம், ஓய்வு என 4ஆயிரம் பேர் போக, தற்போது 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களே உள்ளோம்.
கணினிஅறிவியல், உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்வியல்திறன்கல்வி ஆகிய எட்டு சிறப்பு பாட ஆசிரியர்கள் தொகுப்பூதியத்திலே 10ஆண்டை கழித்துவிட்டோம்.
வாழ்வதாரம் இழந்து தவிக்கின்ற பகுதிநேர ஆசிரியர்களை, நிரந்தரம் செய்து அரசு பணிக்கு ஈர்க்க
மாண்புமிகு முதல்வர் அவர்கள், மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களை வேண்டுகிறோம் என்றார்.
10ஆண்டாக திமுக பணிநிரந்தரம் கேட்டு ஆதரவு குரல் எழுப்பியது.
அதே திமுக முன்பு சொன்னதை செய்யக்கூடிய இடத்தில் ஆளும்கட்சியாக உள்ளது.
உங்கள் தொகுதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் தருமபுரி கன்னியாகுமரி மயிலாடுதுறையில் பகுதிநேர ஆசிரியரிடம் நேருக்குநேர் இன்றைய முதல்வர், அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்தபோது வாக்குறுதி கொடுத்து இருந்தார்.
இது
100 நாளில் நிறைவேற்றப்படும் என்றதால், பணிநிரந்தரம் செய்யப்படுவோம் என முதல் பட்ஜெட்டிலே எதிர்பார்த்தோம். ஆனால் நிறைவேற்றவில்லை.
மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் பேட்டியிலும், சட்டசபையிலும் தேர்தல் அறிக்கைபடி பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வோம் என்று அறிவித்து இருந்தார்.
மாண்புமிகு முதல்வர் அவர்கள் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் அரசாணையாக கொண்டுவர துறை அதிகாரிகள் கூட்டத்தில் உத்தரவிட்டார்.
இதெல்லாம் செயல்படுத்த வேண்டும்.
இரண்டாவது பட்ஜெட் வரும் 10ந் தேதியோடு முடிய உள்ளதால்,110 விதியின் கீழ் பணிநிரந்தரம் அறிவிப்பு செய்து விடியல் தர வேண்டும் என்றார்.
----------------------------------------
எஸ்.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் : 9487257203
----------------------------------------