அரசு கலைக் கல்லூரிக்கு முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என்று கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை விடுத்துள்ளது.கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மூத்த துணைத்தலைவர் ஜெமினி எம்.என். ராதா தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர்
கா. பொன்முடி ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது :-
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ள சி. முட்லூர் என்ற இடத்தில் இருக்கும்
அரசு கலைக்கல்லூரி க்கி அரசியல் மற்றும் கலைத்துறை இலக்கியப் பணியின் மூலம் தமிழ் மொழியை வளர்த்து தமது வாழ்நாள் முழுவதும் தமிழ் நாட்டிற்காக உழைத்த மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் டாக்டர் கலைஞர்
மு .கருணாநிதி யின் பெயரை சூட்டி அரசாணை பிறப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் ஜெமினி.எம்.என்.ராதா கூறியுள்ளார்