கடமலை மயிலை ஒன்றிய வடக்கு அதிமுக செயலாளர் மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்திய
மே 1
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் கடமலை மயிலை ஒன்றியம் ஆத்தங்கர பட்டியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும் முன்னாள் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான கொத்தாள முத்து அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் அவரது பூதவுடலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் கிளை கழக உறுப்பினர்கள் தொண்டர்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் அனைவரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர் இவரின் மறைவு செய்தியை அறிந்து சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து அங்கிருந்து தரைவழி மார்க்கமாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் ஆத்தங்கரைபட்டி வந்தடைந்தார் கொத்தாளமுத்துவின் பூதவுடலுக்கு மலர்வளையம் வைத்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் அவர்கள் நேரிடையாக அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் அதன்பின்பு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது