கல்விக் கட்டணத்தை குறைக்கக்கோரி ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம்
கடலூர் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி யில் பயிலும், மருத்துவ மாணவர்களை தனியார் மருத்து வக்கல்லூரியின் கல்விக் கட்டணத்தை கட்ட வேண்டும் என நிர்வாகம் மாணவர்களுக்கு நெருக்கடி தந்து வந்தது. அரசு மருத்துவக்கல்லூரியில் வாங்கப்படும் கல்விக் கட்ட ணத்தை தான் கட்டுவோம் எனக் கூறி கடந்த 12ம் தேதி முதல் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று மாலை 6-வது நாள் போராட்டமாக புத்தகம் ஏந்தி மருத்துவக்கல்லூரி புல முதல்வர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.