அம்பேத்கரின் 131 பிறந்த நாளை முன்னிட்டு விசிக கட்சியினர் மாணவ மாணவியர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி

அம்பேத்கரின் 131 பிறந்த நாளை முன்னிட்டு விசிக கட்சியினர் மாணவ மாணவியர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி 
ராணிப்பேட்டை மாவட்டம்
13.04.22
 காவேரிப்பாக்கம் அடுத்த சிறுகரும்பூர் கிராமத்தில் அண்ணல் அம்பேத்கரின் 131 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு விசிக கட்சியின் காவேரிப்பாக்கம்  ஒன்றிய  கலை இலக்கிய  பேரவையின் துணை அமைப்பாளரும் ஊராட்சிமன்றத் துணைத் தலைவருமான செ.மனோஜ் குமார் தலைமையில்       அதே கிராமத்தில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் ஆரம்பப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு

 பள்ளியின் தலைமையாசிரியர் மதிவதனி மற்றும் உதவி ஆசிரியர் சுஜா முன்னிலையில்   சுமார் 12000 மதிப்பீட்டில் நோட்டுப் புத்தகங்கள், மதிய உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கினர்   அதனைத் தொடர்ந்து  
அரசினர் மேல்நிலைப் பள்ளியிலும் விசிக கட்சியின்  ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் செ. மனோஜ் தலைமையில்

  350க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் கருணாகரன் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் முன்னிலையில் சுமார் 40 ஆயிரம் மதிப்புள்ள  நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கு.தமிழ்செல்வி குணசேகரன் கலந்துகொண்டு மாணவ மாணவியர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார்

இந்த நிகழ்வின் போது முகாம் செயலாளர் தினேஷ் குமார் மற்றும் ரஞ்சித் உடன் இருந்தனர்
நிகழ்ச்சியின் இறுதியில் தலைமையாசிரியர் கருணாகரன் அனைவருக்கும்  நன்றி கூறினார்.
Previous Post Next Post