மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிபட்டி, போலியம்பட்டி கிராம ஊராட்சிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரு மாதத்தில் இரண்டு வாரங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.,
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சுழற்சி முறையில் மாதத்திற்கு ஒரு வாரம் மட்டுமே பணி வழங்கப்படுவதாக குற்றம்சாட்டி., பழைய முறைப்படியே பணிகளை வழங்க வலியுறுத்தி இன்று உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த கீரிபட்டி, போலியம்பட்டி கிராம பெண்கள் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன் தலைமையிலான அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் பழைய முறைப்படி பணி வழங்க நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.,