மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டாரம் நாகமலை புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட சிறுமலர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட பல்நோக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம் முகாமில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு மாணிக்கம் தாகூர் அவர்கள் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் குமரகுருபரன், இணை இயக்குனர் செல்வராஜ், துணை இயக்குனர் (தொழுநோய் ) விஜயன், துணை இயக்குனர் (காசநோய் ) ராஜசேகரன் ஆகியோர்கள் உடனிருந்து முகாமை துவக்கி வைத்தார்கள். இம்முகாமில் வளையங்குளம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தனசேகரன் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள், நலக் கல்வியாளர்கள் முத்துவேல் , பாலகிருஷ்ணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன் சுகாதார ஆய்வாளர்கள், அழகுமலை, செந்தில் கருப்பையா, கருப்பசாமி, அந்தோணி, பரங்கிரி, தினேஸ்குமார், கேசவன், சுரேஸ்குமார், ராஜகுரு,சிவப்பிரசன்னா, ராதாகிருஷ்ணன், சமுதாய செவிலியர் , பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மருந்தாளுனர்கள், ஆய்வக நுட்புணர்கள் , அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர் களை கொண்டு பொதுமக்களுக்கு காது மூக்கு தொண்டை இருதய நோய் சிகிச்சை பொது மருத்துவம் அறுவை சிகிச்சை கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, பொது மக்களுக்கு இ.சி.ஜி, ஸ்கேன், எக்ஸ்ரே பரிசோதனை, காசநோய் பரிசோதனை, புற்றுநோய் பரிசோதனை காசநோய் பரிசோதனை ரத்தப் பரிசோதனை,ரத்த அழுத்தம், தோல் மருத்துவம், இருதய நோய் பரிசோதனை, எலும்பு மருத்துவம், கண் மருத்துவம், பல் மருத்துவம் ஆயுஷ் சித்தா யுனானி மருத்துவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தார்கள். மேலும் இம்மு முகாமில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு மருத்துவ மேல் சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அமைப்பு சார தொழிலாளர் நலவாரிய அட்டை வழங்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு அவர்களுக்கு சிகிச்சையும் நலவாரிய அட்டை வழங்கப்பட்டது. முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்கப்பட்டது,
மேலும் இந்த முகாமில் 1500 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்