நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் JKK நடராஜா பகுதியில் சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா மற்றும் திருப்பூர் குமரன் பிறந்தநாள் விழா விடியல் ஆரம்பம் பவுண்டேஷன் சார்பாக கொண்டாடப்பட்டது.



விடியல் பிரகாஷ் தலைமை தாங்கி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தினர்.

தியாகி சுப்பிரமணிய சிவா மற்றும் திருப்பூர் குமரன் அவர்கள் வாழ்க்கை வரலாற்றை மாணவர்களுக்கு பஞ்சாலை சண்முகம் எடுத்துரைத்தார்.

மேலும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசு வழங்கப்பட்டது.

மேலும் மாணவ மாணவிகளுக்கு 64 வது வாசிப்பு மையம் தொடங்கப்பட்டு மையத்தை ஜமுனா, கோமதி, ஆகியோர் மேற்பார்வையில் மையம் நடைபெறும்.

இனிய விழாவில் தீனா நன்றி உரையாற்றினார்.

அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
Previous Post Next Post