போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பசுமைப் பள்ளி தொடக்க விழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தார்


கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பாக, பசுமைப் பள்ளி தொடக்க விழா பகுதி1 மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். பருவமழை மாற்றம் மற்றும் வெப்பநிலை உயர்தல் ஆகியவை உலக சுற்றுச்சூழலில் மிக முக்கியமான பிரச்சனையாகும். எனவே, தமிழ்நாடு அரசின் சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக அவசியமாகிறது. 
இளைய தலைமுறையினரிடையே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அவசியத்தை எடுத்துரைக்க அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளை தேர்ந்தெடுத்து, அதில் பசுமை பள்ளி திட்டம் (Green School Scheme) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நேரடியாக சென்றடைய பசுமை பள்ளி திட்டம் திட்டத்திற்காக (முதல் கட்டம்) தமிழகத்தில் 25- பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பள்ளிகளுக்கு தலா ரூ.20 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பசுமை பள்ளி திட்டத்தில் தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25-பள்ளிகளில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் கட்டமாக தேர்வாகியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பாக, 20 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் வேளாண் பொறியியல் துறை சார்பாக, 7 லட்சத்து 34 ஆயிரத்து 353 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சூரிய சக்தி தொகுப்பு, நுண்ணீர் பாசனம் அமைத்தல், நுண்ணீர் பாசன வசதியுடன் கூடிய நிழல் வலை கூடாரம் அமைத்தல், மழைநீர் சேகரிப்பு மற்றும் செட்டு நீர் பாசனம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் 9 லட்சம் மதிப்பில் குறைந்தளவு மின்சாரம் பயன்படுத்தக்கூடிய மின் விளக்குகள் LED மற்றும் மின் விசிறி அமைத்தல், மேலும் முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் காய்கறி தோட்டத்தினை பராமரிப்பதற்கு தோட்டகாரர் 2 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் இரண்டு வருடங்களுக்கு நியமித்தல், பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 1 லட்சம் மதிப்பில் மாதம் ஒரு சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் மற்றும் 22 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சில்லரை செலவு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இப்பள்ளியில் 5 கிலோ வாட் சூரிய மின்கலம் அமைத்ததால், 25 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் மின்சார கட்டணம்  10 ஆயிரத்திலிருந்து 300 முதல் 500 ஆக குறைந்துள்ளது. மேற்கண்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், மாணவர்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும். அதேபோல் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள சுற்றுச்சூழல் கட்டமைப்புகளை மிக நல்ல முறையில் பராமரித்து பாதுகாக்க வேண்டியது இப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுடைய கடமையாகும். இவ்வேளையில் மூன்றாவது கட்டமாக பசுமைப் பள்ளிகள் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் மூன்று பசுமைப் பள்ளிகள் (காவேரிப்பட்டிணம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மத்தூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நல்லூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி) தேர்வாகியுள்ளது. மேலும் நமது கிருஷ்ணகிரி மாவட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுற்றுச்சூழலை மேம்படுத்துதல், மரங்களை நடுதல், பனை விதைகளை நடுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு முன்னோடி மாவட்டமாக திகழ்கிறது. 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தியை பெருக்கி, ‘பசுமையான, ஒளிமையமான எதிர்காலத்தை உருவாக்கும் பொருட்டு, பிரதம மந்திரியின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் கீழ், வீடுகளில் சூரிய தகடுகள் பொறுத்தி இலவச மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், மாவட்டம் முழுவதும் 3500 வீடுகளுக்கு சூரிய மின்கலம் சோலார் பேணல் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 3 கிலோவாட் சூரிய மின்கலம் அமைக்கும் போது 2400 சதுர அடி பரப்பளவு கொண்ட வீடு முழுவதும் சூரிய சக்தி மூலம் மின்சாரம் பெற்று பயன்படுத்தலாம். இதற்காக தமிழக அரசு 78 ஆயிரம் மானியம் வழங்குகிறது. அதேப்போல் 1 கிலோ வாட்டுக்கு 30 ஆயிரமும்,                                  2 கிலோவாட்டுக்கு 60 ஆயிரமும் மானியம் வழங்கப்படுகிறது. அதேப்போல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வனத்துறை சார்பாக, வருடத்திற்கு 7 இலட்சம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்பணியை மாவட்ட நிர்வாகம், தனியார் நிறுவனங்களுடன் (டைட்டன், டெல்டா, டிவிஎஸ்) இணைந்து செயல்பட்டு வருகிறது. மரம் நடுவதற்கான இடங்களை அரசாங்கம் வழங்குகிறது. அந்நிலத்தில் தனியார் நிறுவனங்கள் மரக்கன்றுகளை நட்டு மூன்று வருடங்களுக்கு பராமரிப்பு செய்து வழங்குகிறது. அதனடிப்படையில் இதுவரை 5 இலட்சம் மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. 
போச்சம்பள்ளி வட்டம், மத்தூர் பகுதியில் பனை அதிகமாக வளர்கிறது. பனை மரங்கள் வளர்ப்பு அதிகப்படுத்த மத்தூரில் பனை நர்சரி அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை மூன்றரை இலட்சம் பனை விதைகள் நட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் 6 இலட்சம் பனை மரம் உற்பத்தி செய்வதை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவற்றை நட்டு பராமரிப்பவர்களுக்கு இலவசமாக மாவட்ட நிர்வாகம் வழங்கி வருகிறது. அதேப்போல் பனை விதைகளை சேகரித்து கொடுப்பவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும். அவற்றிற்கு முதல் பரிசாக 10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக 5 ஆயிரமும், மூன்றாம் பரிசாக 3 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. 
அதேப்போல் மாணவர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். சோலார் பயன்படுத்த வேண்டும். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தேவையற்ற போது மின்விசிறி, மின் விளக்கு ஆகியவற்றின் செயல்பாட்டை நிறுத்தி வைக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் எடுக்கும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் தங்கள் முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் தெரிவித்தார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார். முன்னதாக, பள்ளி வளாக நுழைவு வாயிலில், பசுமைப் பள்ளி பெயர் பலகையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் பகான் ஜெகதீஷ் சுதாகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் முத்துராஜ், உதவி சுற்றுசூழல் பொறியாளர் செந்தில் குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் இந்திரா, வேளாண்மை பொறியியல் துறை பொறியாளர் சந்திரா, உதவி செயற்பொறியாளர் ரவி, மின் பகிர்மான உதவி செயற்பொறியாளர் நளினி, தனி வட்டாட்சியர் வெங்கடேசன், மாவட்ட கல்வி அலுவலர் ராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கல்வி) அப்துல் சர்தார், தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தீர்த்தகிரி, பள்ளி தலைமையாசிரியர் ஜெயலட்சுமி, எம்ஜிஎம் பள்ளி முதல்வர் செல்வராஜ், போச்சம்பள்ளி சிப்காட்டில் செயல்பட்டு வரும் செய்யாறு பேர்வே எண்டர்பிரைசஸ் கம்பெனி பிஆர்ஒ பிரசாத், ரீ சஸ்டைனபிலிட்டி ஐ டபிள்யூஎம் சொலுஷன்ஸ் லிமிடெட் திட்ட அலுவலக மனித வள மேம்பாட்டு அலுவலர், போச்சம்பள்ளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் திமுக ஒன்றிய செயலாளருமான சாந்தமூர்த்தி, திமுக மாவட்ட மருத்துவர் அணி துணை தலைவர் மருத்துவர் தென்னரசு, முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் மணிமேகலை அருள், பர்கூர் தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தணிகைவேலன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் சாந்தமூர்த்தி, தொழிலதிபரும் ராம் டிவி சென்டர் உரிமையாளர் பரசுராமன், போச்சம்பள்ளி வட்டாட்சியர் அருள், வருவாய் ஆய்வாளர் குமாரவேல், ஆசிரியர்கள், கோவிந்தராஜ், மயில் வாகனம், வடிவேல், சுகுமார், குமார், ஜெகதீஸ்வரன், ராஜசேகர், தீர்த்தகிரி, பூபதி, சகாதேவன், விழா ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சந்திரசேகர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், இருபால் ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பெற்றோர், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post