ஏஐடியுசி யின் 106வது அமைப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் மணிகண்டம் சோமரசம்பேட்டையில் உள்ள ஒன்றிய தலைமை அலுவலகத்தில் 31.10.2025 இன்று மாலை 5.30 மணி அளவில் கட்டட சங்க மாவட்ட துணைச் செயலாளர் தோழியர் M. மருதாம்பாள் தலைமையில் நடைபெற்றது
நிகழ்ச்சியில் கட்டட சங்க மாவட்ட தலைவர் தோழர் M.R. முருகன் அவர்கள் கட்டட சங்க கொடியினை ஏற்றி வைத்து தோழர் குருதாஸ் தாஸ் குப்தா அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சியில் சிபிஐ மாவட்ட குழு உறுப்பினர் தோழியர் M.ரஜியாபேகம் மாதர் சங்க ஒன்றிய செயலாளர் தோழியர் B.வித்யா உள்ளாட்சி செயலாளர் தோழியர்J. நதியா துணை செயலாளர் தோழர் C.ஜெயபால் பொருளாளர் தோழியர் K.பாப்பாத்தி சிபிஐ நிர்வாக குழு உறுப்பினர்கள் B.பல்கீஸ்பானு ,M சகுந்தலா மற்றும் V.கோவிந்தராஜ்,K.தனலெட்சுமி, S.பத்மாவதி, எம்.ஜி.ஆர் நகர் கிளை செயலாளர் S.விஜயகுமாரி , அம்சவள்ளி, சுதாகர் ,சுப்புலெட்சுமி, பாப்பாத்தி, வேம்பு, இந்திராணி,ராமு,மாரிக்கண்ணு, இளஞ்சியம்,தாயம்மாள், ஜோதி ,பாத்திமா,சித்ரா,சரஸ்வதி, விஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சி இறுதியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி அமைப்பு தின கருத்தரங்கமும் நடைபெற்றது இறுதியாக தோழியர் M.ரஜியாபேகம் நன்றி கூறினார்