தருமபுரி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் "மக்களுடன் முதல்வர்” திட்டம் துவக்கி வைக்க உள்ளதை முன்னிட்டு, மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., ஆகியோர்கலந்து கொண்டனர்

தருமபுரி மாவட்ட ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர்"திட்டம் துவக்கம் 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை (11.07.2024) தருமபுரி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் "மக்களுடன் முதல்வர்” திட்டம் துவக்கி வைக்க உள்ளதை முன்னிட்டு, மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., ஆகியோர் இன்று (10.07.2024) பாளையம் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விழா நடைபெறும் இடத்தையும், முன்னேற்பாடு பணிகளையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர். உடன் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.கௌரவ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், முன்னாள் அமைச்சர் திரு.பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, தருமபுரி நகர்மன்ற தலைவர் திருமதி.லட்சுமி நாட்டான் மாது, வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி, தனித்துணை ஆட்சியர் திருமதி.தனப்பிரியா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
Previous Post Next Post