கேரளா மாநிலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்களை இரண்டு காட்டு யானைகள் ஒன்று சேர்ந்து துரத்தியதால் பைக்கை சாலையில் விட்டுவிட்டு தப்பி ஓடிய இளைஞரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.!!
கேரளா மாநில வனப்பகுதியை ஒட்டி உள்ள சாலையின் இரு பக்கம் இரண்டு காட்டு யானைகள் நின்று கொண்டிருந்த நிலையில் அந்த வழியே காரில் வந்தவர்கள் யானை நிற்பதை கண்டு காரை நிறுத்தி யானைகள் செல்லும் வரை காத்திருந்தனர்.
அப்போது காரின் பின்புறத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் யானை இருப்பதை அறியாமல் முன்னே சென்ற நிலையில் யானையை கண்டதும் இருசக்கர வாகனத்தை நிறுத்தினர்.
சாலை ஓரத்தில் உள்ள வனப்பகுதிக்குள் யானை நின்றிருந்ததால் காட்டு யானையை கடந்து சென்றுவிடலாம் என நினைத்து இருசக்கர வாகனத்தில் சிறிது தூரம் சென்ற நிலையில் இளைஞர்களை நோக்கி இரண்டு யானைகளும் ஆவேசமாக துரத்திய நிலையில் இருசக்கர வாகனத்தை கீழே விட்டு விட்டு இரண்டு நபர்கள் அங்கிருந்து ஓடி காட்டு யானைகளிடம் தப்பித்தனர்.
இந்த சம்பவத்தை அந்த வழியே காரில் பயணித்த பயணிகள் தங்களது செல்போனில் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வருகிறது....