திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்த இராமநாதசுவாமி கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

திருவாரூர் மாவட்டம் 
கூத்தாநல்லூர் அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்த இராமநாதசுவாமி கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே திருராமேஸ்வரத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்த இராமநாதசுவாமி கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீராமர் இலங்கையில் அசுரர்களை அழித்துவிட்டு திரும்பும்போது தனது தந்தைக்கு திதி செய்யாமல் விடுபட்ட பிதுர்கடன் தோஷம் நீங்கவும் பலரை போரில் கொன்றதால் ஏற்பட்ட கொலை பாவமான பிரம்மஹத்தி தோஷம் நீங்கவும் திருராமேஸ்வரம் என்கிற திருத்தலத்தில் ஸ்ரீ ராமபிரான் ஐந்து நாள்கள் சிவபூஜை செய்தார். தங்கிய நாள்களில் அமாவாசை திதி வந்தபடியால், நித்யகர்ம அனுஷ்டானங்கள் செய்ய நீர் வேண்டி ஸ்ரீராமன் தனது கோதண்டத்தில் பிரம்மாஸ்திரத்தை பூட்டி பூமியில் பாய்ச்ச ஊற்று கிளம்பி குளமாக நிரம்பியது. இதனால் ஏற்பட்ட குளம் பிரம்ம தீர்த்தம் எனவும் ஊற்று எடுத்த இடத்தில் கோதண்டத்தினால் உண்டானதால் அந்த கிணறு கோதண்ட தீர்த்தம் எனவும் வழங்கப்பெற்றது. 
சீதை ராமனை பிரிந்து அசோகவனத்தில் தனித்திருந்த பாவத்தைப் போக்க இந்த தலத்தில் சிவபூஜை செய்ததினால் சிவபெருமான் பார்வதிதேவியுடன் காட்சி தந்திருளினார். இத்தகைய சிறப்பு வாய்ந்த இராமநாத சுவாமி கோவிலின் தேரோட்டத்தில் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ இராமநாதசுவாமி திருத்தேரில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் கோவிலை சுற்றி நான்கு வீதிகளில் வலம் வந்தது.
பின்னர் அருகில் உள்ள குளத்தில் சுவாமிகளுக்கும் தீர்த்தவாரி நடத்தப்பட்டது. இதில் சசிகலா சகோதரர் திவாகரன், உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் .
Previous Post Next Post