திருச்சி நவ 01
திருச்சி மண்டலம் அரசு போக்குவரத்து கழகம் முன்பு
ஏஐடியூசி 107 வது அமைப்பு தின நாளில் போக்குவரத்து கழகங்களில் ஒப்பந்த முறையில் நியமனங்கள் செய்வதை கைவிட வலியுறுத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்
அரசு போக்குவரத்து கழகம் ஏஐடியூசி மண்டல தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார் .மத்திய சங்க நிர்வாகிகள் ஆறுமுகம் சந்திரசேகரன் பழனிச்சாமி செல்வராஜ் மாசிமலை பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் ஏஐடியூசி 107 வது அமைப்பு தின கொடியை ஏற்றி வைத்து பேசினார்
பொதுச் செயலாளர் சுந்தர்ராஜ் பொருளாளர் கார்த்திகேயன்
கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள் சம்மேளன பொருளாளர் நேருதுரை சிறப்புரை ஆற்றினார்.
தமிழக அரசு தொழிலாளர் கொள்கையை வெளியிட வேண்டும்
தொழிலாளர்கள் விரோத நடவடிக்கைகளை கைவிட வேண்டும்
போக்குவரத்து கழகங்களில் ஒப்பந்த முறை நியமனங்கள் கூடாது
மின்சார பேருந்துகளை தனியார் இயக்க அனுமதிக்க கூடாது
போக்குவரத்து கழகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட வேண்டும்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினார்கள்.
அரசியலமைப்பை பாதுகாப்போம்
நாட்டை பாதுகாப்போம்
தொழிலாளர்கள் நலன்களை பாதுகாப்போம்
மக்களை காப்போம் என்று தொழிலாளர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சங்க பொருளாளர் கனகராஜ் நன்றி கூறினார்.