தமிழ்நாடு அரசு தொழில் கொள்கையை வெளியிட வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி, நவ.1-

திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே ஏ.ஐ.டி.யு.சி. சார்பில்  தமிழ்நாடு அரசு தொழில் கொள்கையை வெளியிட வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.42 ஆயிரம் வழங்க வேண்டும். 480 நாட்கள் பணி புரிந்த அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் நல நிதியில் இருந்து உதவி தொகைகளை உயர்த்தி வழங்க வேண்டும். போக்குவரத்துத் துறையில் முப்பதாயிரம் காலி பணியிடங்களை நிரந்தர பணி யாளர்கள் கொண்டு நியமிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பொதுச்செய லாளர் சுரேஷ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். பொருளாளர் ராமராஜ், துணைத்தலைவர்கள் சிவா, செல்வ குமார், ஜெயக்கொடி பொருளாளர் ராம ராஜ் செயலாளர்கள் லோகநாதன் சுந்தர்ராஜ், ஜனசக்தி உசேன், முருகன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தின். முடிவில் தரைக் கடை சங்கமாவட்ட துணை செயலாளர் சுமதி நன்றி கூறினார். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Previous Post Next Post